'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுத் தினம்'... ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’... ‘காவல்துறை அறிவிப்பு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுத் தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரத நினைவிடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக, வியாழக்கிழமை காலையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஊர்வலமாக செல்ல உள்ளனர்.
இதனை முன்னிட்டு காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் சூழ்நிலைக்கு தக்கவாறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
1. வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னம் சந்திப்பில் திருப்பப்பட்டு, கொடிமரச் சாலை, அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
2. முத்துச்சாமி பாயிண்டிலிருந்து வரும் வாகனங்கள், கொடிமரச் சாலைக்கு செல்லாமல், வாலாஜா சாலையில் திருப்பப்பட்டு, அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
3. நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், ஆடம்ஸ் பாயிண்ட்டில் திருப்பப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாக செல்லலாம்.
4. அண்ணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை ஆகியவற்றில் செல்ல அனுமதிக்காமல், நேருக்கு நேராக அண்ணா சாலையில் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
5. விவேகானந்தர் இல்லம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், கண்ணகி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பாரதி சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.
6. தெற்கில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யோகாவில் சாதனை’... ‘பத்மஸ்ரீ விருது பெற்ற’... 'நானம்மாள் பாட்டி காலமானார்’!
- 1972-ல் நடந்த அந்த ட்விஸ்ட்.. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவுக்கு இப்போ 46 வயசு!
- ‘இளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கில்’... ‘இருவாரங்களுக்குப் பின்னர்’... 'முன்னாள் கவுன்சிலர் கைது'!
- ஆத்துல குளிக்கப்போன அக்கா, தம்பி மூழ்கி பலியான பரிதாபம்..! துடிதுடித்துப்போன தாய்..!
- 'இந்த கோலத்துல உன்ன பாக்கவா சென்னைக்கு அனுப்புனேன்'...'கதறிய தாய்'...ஹெச்.ஆர் இறந்தது எப்படி?
- ‘சென்னையில் கிரிக்கெட் விளையாடிய கப்பற்படை வீரர்’.. நெஞ்சில் பந்து பட்டு பலியான சோகம்..!
- ‘காரணமே இல்லாம தினமும் அடிப்பாங்க’.. ‘9 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்’ நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- ‘இறந்தபின் நகர்ந்த சடலம்’ .. 17 மாத ஆய்வில் நடந்த திகில் சம்பவம்..!
- ‘பொது மயானத்தில் சடலத்தை எரிக்க அனுமதி மறுப்பு’.. கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரித்த அவலம்..!
- கல்யாணமான 14 நாளில் மணமகன் தீ வைத்து கொலை..! பரபரப்பு சம்பவம்..!