“இத்தோட நிறுத்துறோம்!”.. ‘பிரபல’ லேப்டாப் நிறுவனம் எடுத்துள்ள ‘பரபரப்பு’ முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜப்பானைச் சேர்ந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான டோஷிபா தனது லேப்டாப் வியாபாரத்தை நிறுத்துகிறது.
நவீன லேப்டாப்புகளுக்கு பிரபலமான பெயர் பெற்ற டோஷிபா நிறுவனம், தற்போது லேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ள தகவல் தொழில்நுட்ப உலகை அதிரவைத்துள்ளது. முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு ஷார்ப் நிறுவனத்துக்கு தனது 80.1 பங்குகளை விற்றிருந்த டோஷிபா, தற்போது தம்மிடம் எஞ்சியுள்ள 19.9 சதவீதப் பங்குகளையும் அந்நிறுவனத்துக்கே விற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “டைனாபுக் பிராண்டில் டோஷிபா நிறுவனத்துக்கு மீதமிருந்த 19.9 சதவீதப் பங்குகள் அனைத்தும் ஷார்ப் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் டைனாபுக், ஷார்ப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கவுள்ள துணை நிறுவனமாக மாறியிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.1985-ம் ஆண்டு லேப்டாப் உலகிற்குள் வந்த டோஷிபா, ‘சாட்டிலைட்’ என்கிற பெயரில் ஐபிஎம், திங்க் பேட் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக லேப்டாப் சந்தையில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது.
அதன் பின்னர் 1990-2000களின் ஆரம்பத்தில் கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டோஷிபா இருந்து வந்தது. பின்னாளில் லெனோவா, ஹெச்பி, டெல் நிறுவனங்களின் போட்டியால் டோஷிபாவின் வளர்ச்சி சற்றே குறைந்து என சொல்லலாம். 2011-ஆம் ஆண்டு 1.77 கோடி கணினிகளையும் 2017-ம் ஆண்டு 10.4 லட்சம் கணினிகளையும் மட்டுமே டோஷிபா நிறுவனத்தால் விற்க முடிந்தது என்று புள்ளிவிவரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- SAFETY முக்கியம் 'மக்களே'... 'கொரோனா' மீண்டும் 'டச்' பண்ணாம இருக்க... 'ஜப்பான்' யுக்தியை கையிலெடுத்த தமிழக அமைச்சர்!!!
- மனித எலும்புக்கூடுகளுடன் 'பேய்' படகுகள்... கடற்கரையில் ஒதுங்கியதை பார்த்து 'ஷாக்'கான மக்கள்!
- VIDEO: "ஹலோ, எங்க ஆட்டம் எப்படி இருக்கு?" - 'சியர் கேர்ள்ஸ்'க்கு சவால் விட்ட ரோபோக்கள்! - "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...?!!"
- "முடியல!.. சமூகம், பொருளாதாரம்னு எவ்வளவோ இருக்கு!.. கொரோனாவும் கம்மி ஆயிருச்சு!".. அவசர நிலையை முடித்துக் கொண்ட நாடு!
- WorkFromHome-னு சொல்லிட்டு பாதி பேர் ‘இந்த’ வேலையதான் பாத்திருக்காங்க.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- 'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்!'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'!
- பாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்!'...
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- 'கொரோனா' பரவலைத் தடுக்க... 'ஆண்களே' சூப்பர் 'மார்க்கெட்' செல்ல வேண்டும் ஏனென்றால்... 'சர்ச்சையை' ஏற்படுத்தியுள்ள மேயரின் 'கருத்து'...
- 'அழகை விட உயிரே முக்கியம்...' 'வேறு' வழியில்லாமல் 'ஜப்பான் அரசு...' செய்த 'திகைக்கச் செய்யும்' காரியம்...