என்னடா சட்னிக்கு காசு கேக்குற.. ஆமானே.. இட்லி ப்ரீணே.. வைரல் மீம்ஸ்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்கள் உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் சரியாக இல்லாததால், காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக காய்கறிகளின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.

அதில் குறிப்பாக தக்காளியின் விலை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாதம் 1 கிலோ ரூ.15-க்கு விற்ற தக்காளியின் விலை, தற்போது ரூ.150-ஐ தொட்டுள்ளது. அதனால் தக்காளி வாங்கவே மக்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டம், படிக்கல் என்ற ஊரில் ப்ளாஸ்டிக் கவரில் இரண்டு தக்காளியை பேக் செய்து ரூ.18-க்கு விற்பனை செய்த போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தக்காளி ஊறுகாய் பாக்கெட்டில் விற்ற காலம் போய், இப்போது தக்காளியே ஊறுகாய் மாதிரி பாக்கெட்டில் தொங்கிறது என பலரும் குறும்பாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோல் நெட்டிசன்கள் பலரும் தக்காளி விலை குறித்து மீம்ஸ்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

TOMATOPRICE

மற்ற செய்திகள்