இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது பற்றி ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

2. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களின் விலை இன்று முதல் (வெள்ளிக்கிழமை) உயருகிறது. இதன்மூலம் குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டும்.

3. பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதற்கு அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் வருமான வரித்துறை பிரச்சனையை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

4. கொடைக்கானல் அருகே மலைகிராமத்தில் நள்ளிரவில் மதுஅருந்தி  கேளிக்கையில் ஈடுபட்டபோது பிடிபட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட 276 பேரை  போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

5. இலங்கை பிரதமர் ராஜபக்சே, 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார்.

6. இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் பாலாகோட் முகாமில் 27 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

7. நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா நகரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

8. புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு தாய்மார்களைப் போலவே 7 மாத காலம் வரை குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்க உள்ளதாக பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

9. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாளை ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

10. ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவத்தில், மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

11. 200 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் பிரணாஷ் (Pranash)என்ற புதிய ஏவுகணை இந்தியா தயாரிக்க உள்ளது.

12. சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

CRICKET, CRIME, TASMAC, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்