இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-
1. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. 'காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே அணுகுண்டு போர் வெடிக்கும்' என்று பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது மிரட்டல் விடுத்துள்ளார்.
3. இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பதிலடி கிடைக்கும் என வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
4. முதலீட்டாளர்களை தமிழகத்தை நோக்கி ஈர்க்கவே வெளிநாட்டு பயணம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று முதல், இரண்டு வார பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
5. வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்வதற்கு வசதியாக விரைவில் செல்போன் ஆப் அறிமுகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
6. மாவட்டங்களைப் பிரிக்கும்போது, மக்களின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்று தமிழக அரசை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
7. பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் 2½ நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
8. ரிஷப் பந்த் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால், 2-வது டெஸ்டில் விளையாட சகா தகுதியானவர் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி தெரிவித்துள்ளார்.
9. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
10.உபெர் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஆண்டனி லெவண்டோஸ்கி, கூகுள் நிறுவத்தின் வர்த்தக ரகசியங்களை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்