இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1.மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத நிலையில், மத்திய அரசின் பரிந்துரைப்படி ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

2. ரஜினியின் வெற்றிடம் குறித்த கருத்துப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுமை மிக்க தலைவர் இல்லை எனக் கூறும் ரஜினி என்ன அரசியல் தலைவரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

3. அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, காலை உணவாக இட்லி, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றை வழங்க  தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

4. புழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன், ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.

5. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது.

6. அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து வெளியிட்ட, 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் தெரிவித்தனர்.

7. சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் 108 எம்.பி. கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

8. மோட்டோரோலா நிறுவனத்தின், மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

9. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 350 டி கார் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் விற்று தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

10. வங்காளதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பயணிகள் உயிரிழந்தனர்.

11. ரஷ்யாவில் வழிதவறி சென்று குளிர்பிரதேசத்தில் சிக்கித் தவித்த ஃபிளெம்மிங்கோ (Flamingo) பறவை, மீட்கப்பட்டு உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

12. வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

HEADLINES, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்