இன்றைய முக்கியச் செய்திகள்..! ஒரு வரியில்... ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-

1. சான்பிரான்சிஸ்கோவில் டெஸ்லா காருடன் முதல்வர் பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

2. இன்று நள்ளிரவு 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் சந்திராயான் -2 வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

4. ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

5. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

6. திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தர மறுத்த தனியார் நிறுவனம் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

7. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடி ஏலத்தின் மூலம் 7 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8.  வீட்டு காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியை சந்திக்க அவர் மகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

9. 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை திட்டத்தை இந்திய விமானப்படைக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

10. தெலுங்கானாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

HEADLINENEWS

மற்ற செய்திகள்