இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-
1. இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியின் வீடியோவை பகிர்ந்ததாக கோவையைச் சேர்ந்த 5 பேர் பிடிபட்டுள்ளதும், அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இன்று ‘Fit India' இயக்கத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
3. சாதனை படைத்த வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
4. இருமாநில தண்ணீர் பிரச்சனை குறித்து செப்டம்பர் 25-ந்தேதி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
5. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
6. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
7. திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பெருமையை இவை பெறுகின்றன.
8. காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
9. இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பேட்மிண்டன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக என்னை பார்க்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
10. பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்