இன்றைய முக்கியச் செய்திகள்..! ஒரு வரியில்... ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-

1. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2. கூறியபடி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. தலைமை காஜி அளித்த தகவலை அடுத்து, மொஹரம் விடுமுறை தினமாக வரும் செப்டம்பர் 11 -ம் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

4. தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

6. ஹாங்காங்கில் 3 மாதமாக மக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக குற்றவழக்குகளில் தொடர்பு உடையவர்களை நாடு கடத்தும் மசோதாவை அந்நாட்டு அரசு வாபஸ் பெற்றது.

7. பொருளாதார மந்தநிலை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சை கேட்குமாறு பாஜகவுக்கு சிவசேனா அறிவுறுத்தியுள்ளது.

8. மீம்ஸ் கிரியேட்டர்கள் தம்மிடம் தோற்று விட்டதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

9. முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ரூ.2300 கோடியில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

10. அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 100 வெற்றிகளை பதிவு செய்து புதிய மைல் கல்லை டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் எட்டியுள்ளார்.

HEADLINES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்