வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு? - வெளியான பரபரப்பு தகவல்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்பது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹைதராபாத்தில் உயர் ரத்த அழுத்தத்துக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர்களின் ஆலோசனையை அடுத்து, தன்னால் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்றும், ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் கூறி தனது அரசியல் முடிவை அறிவித்தார்.
இதனால் ரஜினிகாந்தின் அரசியல் ரீதியான அபிமானிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தாலும், ரஜினியின் உடல்நலம் தான் முக்கியம். அவர் எடுத்த முடிவில் தங்களுக்கு திருப்தி தான் என்றும் சிலர் கூறிவந்தனர். இதனிடையே சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் பலவும் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுதாகர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: ‘Honda ஆக்டிவா.. மாதம் ஒரு முறை Mutton பிரியாணி.. பட்டு வேட்டி சேலை’ - இது ‘வேறமாரி’ தேர்தல்!
- “ஷாக் ஆயிட்டேன்!”.. ஷங்கர் வெளியிட்ட அறிக்கை! எழும்பூர் நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ விளக்கம்!
- ‘சிறையிலிருந்து விடுதலை ஆன சசிகலா’!.. ஆனாலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.. காரணம் என்ன..?
- வாசிங்டன் சுந்தர் களமிறங்கும் ‘புது’ இன்னிங்ஸ்.. சென்னை மாநகராட்சி ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- 'நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்'... 'தேர்தலுக்கு ஆகப்போகும் செலவு'... தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!
- 'நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்'... 'முதல்வர் வேட்பாளர் விவகாரம்'... பாஜகவின் அதிரடி அறிவிப்பு!
- “சாவோடு சடுகுடு ஆடுவோர்.. மரணத்தோடு மங்காத்தா ஆடுவார்.. எமனை லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார்!” - ரஜினியைப் புகழ்ந்த ‘பிரபல திரைப்பட’ இயக்குநர்!
- 'வெளியானது ரஜினியின் அடுத்த அறிக்கை!'... ‘அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து’.. ரஜினியின் ‘பரபரப்பு’ ட்வீட்!
- 'நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு!'.. தேர்தல் அதிகாரியிடம் டிரம்ப் ரகசிய பேச்சுவார்த்தை!.. கசிந்தது ஆடியோ பதிவு!.. அமெரிக்காவில் பரபரப்பு!
- 'சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்'... 'மீண்டும் சென்னை வருகிறார் அமித் ஷா'... சென்னை விசிட்டில் இருக்கும் அதிரடி பிளான்!