'மையில் மறைந்திருந்த மர்மம்!'... 'குரூப் 4 தேர்வு முறைகேடு நடந்தது இப்படித்தான்!'... 'டிஎன்பிஎஸ்சி ரிப்போர்ட்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறிது நேரத்தில் மறையும் தனித்துவமான சிறப்பு மை பயன்படுத்தி குரூப் 4 முறைகேடு அரங்கேறிய சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் முதலிய பதவிகளுக்கான 9,398 பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. கடந்த நவம்பர் மாதம், தேர்வு முடிகள் வெளியான நிலையில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிக்கப்படியாக தேர்வானது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட டிஎன்பிஎஸ்சி 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில், காவல் துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. முறைகேடு செய்த 99 தேர்வர்களும், இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர். அதன் பின் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவை பயன்படுத்தி, விடைகளைத் தேர்வர்கள் விடைத்தாளில் குறித்துள்ளனர்.

மேலும், சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன், விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளனர். இதின் விளைவாக, 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் இடம்பெற்றுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிகவும் தந்திரமாக நடந்தேறிய இந்த முறைகேடு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

EXAM, TNPSC, SCAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்