TNPSC தேர்வு எழுதுறீங்களா..? அப்போ மறக்காம இதை செஞ்சிடுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வு எழுதுறீங்களா..? அப்போ மறக்காம இதை செஞ்சிடுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
Advertising
>
Advertising

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு நடத்தப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இந்த தேர்வு எழுதுபவர்கள் பலரும் TNPSC இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் TNPSC-யில் ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேணும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC important announcement to all who write the exam

அதில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுப்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும். எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தங்களது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக கேட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

EXAM, TNPSC, OTR, AADHAAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்