'கொரோனாவால் தள்ளிப்போன தேர்வு'... குரூப் 1 தேர்வுக்கான தேதியை அறிவித்த டிஎன்பிஸ்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கான தேதியைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வைக் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகி வந்த பலரும் எப்போது தேர்வு தேதி அறிவிக்கப்படும் என ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் காலிப் பணியிடங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பணத்த மட்டும் கொடுங்க.. கவர்மெண்ட் வேலை கன்ஃபார்ம்!".. டிஎன்பிஎஸ்சி அதிகாரி எனக்கூறி இளைஞர் செய்த காரியம்!
- ‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பது குறித்து’... ‘டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்ட தகவல்’...
- 'குரூப் 4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு'... கலந்தாய்வில் பங்கேற்க தவறினால்?... 'டி.என்.பி.எஸ்.சி' அதிரடி!
- ‘முறைகேடுகளை தவிர்க்க’... ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள்’... விபரங்கள் உள்ளே!
- 'குரூப் 4 முறைகேடு'... 'பெரிய பிளான் ஆனா பழைய டெக்னிக்'... 'இடைத்தரகர்களின் மாஸ்டர் ஐடியா!
- 'குரூப் 2ஏ' தேர்விலும் முறைகேடு.... "அட போங்கப்பா..." 'டி.என்.பி.எஸ்.சி' மேல இருந்த 'நம்பிக்கையே' போச்சு...
- 'சினிமாவை' மிஞ்சும் 'டி.என்.பி.எஸ்.சி.' முறைகேடு... பக்கா 'ஸ்கிரீன் பிளே'... "எப்பா 'அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ்' நோட் பண்ணுங்கப்பா..."
- 'போலீஸ்' எஸ்.ஐ தேர்விலும் 'முறைகேடு'... "அப்போ நாங்கள்ளாம் என்ன 'இது'க்குடா எக்ஸாம் எழுதுனோம்... "கொந்தளிக்கும் தமிழக 'இளைஞர்கள்'...
- 'மையில் மறைந்திருந்த மர்மம்!'... 'குரூப் 4 தேர்வு முறைகேடு நடந்தது இப்படித்தான்!'... 'டிஎன்பிஎஸ்சி ரிப்போர்ட்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!