குரூப் 4 தேர்வு தேதியை அறிவித்தது TNPSC.. எத்தனை காலியிடங்கள்.. என்னென்ன பதவிகள்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறும் தேதியை இன்று வெளியிட்டார் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி பல்வேறு தேர்வுகளின் மூலம் நிரப்பிவருகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது குரூப் 4 தேர்வுக்கான தேதியை இன்று அறிவித்திருக்கிறது டிஎன்பிஎஸ்சி .
செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் குரூப் 4 தேர்வு நடைபெறும் தேதியை அறிவித்து, காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் தேர்வு நடைமுறை குறித்து விளக்கினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும். நாளை (மார்ச் 30) முதல், ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவித்து உள்ளார்.
காலிப் பணியிடங்கள்
தமிழகத்தில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவின் அடிப்படையின் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றன. மீதமுள்ள 7301 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பதவிகள்
தமிழகத்தில் பொதுவாக கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
பல தமிழக இளைஞர்களின் கனவாக உள்ள குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, தேர்வு அறிவிப்பு வெளியீடு.. வயது, தகுதி , காலியிடங்கள் முழு விவரம்
- TNPSC: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு.. மொத்த பணியிடங்கள் விவரம்!
- TNPSC: Group 2,2ஏ தேர்வுக்கு படிப்பவரா நீங்க... உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி.. டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பு!
- SSC அறிவிப்பு: +2 படிச்சிருந்தா போதும் 80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
- ஒண்ணுமே தெரியலை ஒரே இருட்டா இருக்கு.. தலைகீழாக மாறி போன எக்ஸாம்.. பெற்றோர் செய்த செயல்!
- TNPSC தேர்வு எழுதுறீங்களா..? அப்போ மறக்காம இதை செஞ்சிடுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
- அரசு வேலை.. 5 லட்சம் கொடு .. அமைச்சர்களுக்கும் பங்கு தரணும்! வீடியோவில் சிக்கிய திமுக நகர செயலாளர்
- TNPSC தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது... மறு தேர்வு குறித்த புதிய அறிவிப்பு வெளியீடு!
- TNPSC வெளியிட்டது புதிய பாடத்திட்டமே கிடையாது!- குரூப் தேர்வு எழுதுவோருக்கு புது அறிவிப்பு
- TNPSC Exam schedule 2022 : 2022ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு