TNPSC Exam schedule 2022 : 2022ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2022 ம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முழு விவரங்களை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தற்போது வெளியிட்டு அறிவித்தார்.

Advertising
>
Advertising

பிப்ரவரியில் மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குரூப் 2 & 2ஏ பணிகளில் 5,831 பணியிடங்களும், குரூப் 4 பணிகளில் 5,255 பணியிடங்களும் காலியாக உள்ளன. டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஏற்றிவரும் லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

குரூப் 2 -ஏ மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளன. குரூப்-4 பிரிவில 5,244 காலிப்பணியங்கள் உள்ளன. இன்றைய நிலவரப்படியிலான காலிப்பணியிடங்கள், தேர்வுகளுக்கான தேதி வெளியான பிறகும் கூட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குரூப்-4 தேர்வில் தமிழ் தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி. டி.என்.பி.எஸ்.சி சார்பில் 32-க்கும் அதிகமான தேர்வுகள் வருகிற 2022-ம் ஆண்ட நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில்( TNPSC ) 2021-22 ஆண்டுக்கான காலியாக உள்ள இடங்கள் மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பாக, அதன் தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து மேலே குறிப்பிடப்பட்ட அத்தனைத் தகவல்களையும் பகிர்ந்து விளக்கம் அளித்தனர்.

 

JOBS, TNPSC, GROUP-2, GROUP 4 EXAMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்