'யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில்... தமிழ்நாட்டின் வரவு செலவு கணக்கு'!.. நிதி அமைச்சர் பிடிஆர் மாஸ்டர் மூவ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம் முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் இதுவரை 472 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான இணையப் பக்கத்தை தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த மே மாதம் 7ம் தேதிக்கு பின் பெறப்பட்ட நிதிகளை கொரோனா நிதியாக அடையாளப்படுத்தி, நிதி கணக்கை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
ஜனநாயகத்தில் அரசின் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம் என தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து விவகாரங்களையும் (வரவு, செலவு கணக்கு) கணினிமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பி.எம். கேர்ஸ் நிதியில் எந்த வெளிப்படைத்தன்மையும் கிடையாது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 மாதங்களில் சுமார் ரூ. 472 கோடி வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 14 மாதங்களில் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடிதான் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமே இப்படித்தான்!'.. அடுத்த பரிணாமத்தை அடைந்த "ஒன்றிய அரசு" விவகாரம்!.. உண்மையை உடைத்த திண்டுக்கல் ஐ.லியோனி!
- ‘அய்யா உங்களுக்காகதான் காத்திருக்கோம்’!.. மண்டப வாசலில் ‘மணக்கோலத்தில்’ நின்ற ஜோடி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்..!
- தமிழகத்தில் மேலும் 'ஒரு வாரம்' ஊரடங்கு நீட்டிப்பு...! புதிய தளர்வுகள் என்ன...? - முழு விவரங்கள்...!
- 'முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்ட கார்'... 'என்ன ரேட் சார், நானே வாங்கலாம்னு இருக்கேன்'... விலை கேட்டவருக்கு அதிர்ச்சி கொடுத்த ஹூண்டாய்!
- 'அன்று கலைஞர் போட்ட விதை'... 'காரில் கையெழுத்து போட்ட முதல்வர் ஸ்டாலின்'... புதிய உச்சத்தை தொட்ட ஹூண்டாய்!
- 'அன்று கலைஞர் போட்ட விதை'... 'காரில் கையெழுத்து போட்ட முதல்வர் ஸ்டாலின்'... புதிய உச்சத்தை தொட்ட ஹூண்டாய்!
- நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை விவகாரங்களில்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!.. சூழலியலார்கள் வரவேற்பு!
- தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்குமா?.. நடக்காதா?.. எடப்பாடி பழனிசாமி கேள்வி!.. பிரதமருடன் நடந்த உரையாடலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
- தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறைக்கப்படும்..? சட்டமன்றத்தில் நடந்த ‘காரசார’ விவாதம்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!
- 'தொடர்ந்து சொல்லுவோம், திரும்ப திரும்ப சொல்லுவோம்'... 'பாஜக உறுப்பினர் கேட்ட கேள்வி'... முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்!