'மகளிர் சுய' உதவிக்குழு கடன்கள்... தள்ளுபடி செய்த தமிழக 'முதல்வர்'!... சட்டப்பேரவையில் 'அதிரடி' 'அறிவிப்பு'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக மக்கள் அனைவரும் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த கொடிய தொற்றின் காரணமாக, பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை உள்ளது.

அவர்களின் துயரைத் துடைக்க, தமிழக அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர். இதனை எல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவி குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்று நிலுவையிலுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இப்பேரவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்