இன்னைக்கு 'நைட்'ல இருந்து நாளைக்கு 'காலை'ல வரை ரொம்ப உஷாரா இருக்கணும்...! - தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த 'முக்கிய' தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இன்று (30-11-2021) இரவு முதல் காலை வரை கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், " தற்போது வடசென்னையில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மற்ற இடங்களிலும் இனி பெய்ய தொடங்கும். நாளை காலை வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, பின்னர் படிப்படியாக மழை குறையும்.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்களே, இன்று இரவு முதல் நாளை காலை வரையில் மிகுந்த உஷாராக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.

 

பலத்த காற்றுடன், அதன் விளைவாக பலத்த மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான்.  மேலும், இந்த மழை நம்மை ஆச்சர்யப்படுத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால், இதற்கு முன்னால் அரபிக் கடல் உண்டான காற்றழுத்தம் 50 -100 மிமீ மழையைக் கொடுத்ததும் நமக்கு தெரியும்." என தெரிவித்துள்ளார்.

 

WEATHERMAN, RAIN, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்