‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 52 கிலோ’.. ‘பசுவின் வயிற்றில் ஆப்ரேஷன்’.. சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பசுவின் வயிற்றில் 52 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சொந்தமான பசு ஒன்று சில நாட்களாக சாணம், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளது. இதனால் முனிரத்தினம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பசுவை பரிசோத்தித்துப் பார்த்த மருத்துவர்கள் வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து முனிரத்தினம் வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பசுவை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் பசுவின் வயிற்றில் கழிவுப்பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து பசுவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கழிவுகளை அகற்றியுள்ளனர். அதில் 52 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது. இது சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பசுவின் வயிற்றில் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ப்ளாஸ்டிக்கை அழிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் சென்னையில் பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகள் அகற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக்களுக்கு தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

VETERINARY, SURGEONS, TN, PLASTIC, COW, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்