‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர், குடியாத்தம் பகுதியில் வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ.500 வீதம் பணப்பட்டுவாடா செய்யச் சொல்லி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவி சம்பத்  அறிவுறுத்துவதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருவது பரபரப்பான அரசியலை சூழலை உருவாக்கியுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்கக் கோரி பணப்பட்டுவாடா செய்வதான ஒரு வியூகத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெகுவேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதில், அதிமுக, பாமக, தேமுதிக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தும் கோவி சம்பத், ஒவ்வொருவரையும் யார் என்ன என்று  விசாரித்து பணப்பட்டுவாடாவை தனித்தனி பகுதிகளுக்கு தனித்தனி டீமாகச் சென்று கொடுக்கும்படியாக அறிவுறுத்துகிறார்.

அதுமட்டுமல்லாமல், வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்கும் அனைவருக்கும் பணம் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். ஒரு டீமில் 10 பேர் கூட செல்லலாம் என்றும் ஒருவேளை போலீஸ் வரும் தகவல்கள் தெரிந்தால் அவர்களைக் கண்காணிப்பதற்கு 2 பேரை நிறுத்தவும், பணத்தை தனியாகச் சென்று எண்ணுமாறும் குறிப்பிடுகிறார்.

மேலும் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் என்று கூறும் அவர், இதற்கு முன்பாகவும் 1000 கணக்கானோருக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் கூறும் அந்த வீடியோவை பிரத்யேகமாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. முன்னதாக வேலூர் தொகுதி ரத்தானதற்கு எதிராக ஏ.சி.சண்முக வழக்கு தொடர்ந்ததோடு, இன்று காலை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் பணப்பட்டுவாடா செய்பவர்களை மட்டும் தகுதிநீக்கம் செய்யக் கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

LOKSABHAELECTIONS2019, AIADMK, ELECTIONCOMMISSION, PMK, DMDK, VELLORE, VIRALVIDEOS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்