'2 வருஷமா இருந்த நோய்...' 'பசிக்குதுன்னு வாழைப்பழம் சாப்பிட்டப்போ திடீர்னு மீண்டும்...' - மகளுக்காக உணவோட வந்த அப்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வால்பாறை சட்ட கல்லூரி மாணவி தொண்டையில் வாழைப்பழம் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வால்பாறை அருகே இருக்கும் சோலையாறு எஸ்டேட் பஜார் பகுதியை சேர்ந்தவர் திரு.செல்வரத்தினம். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் 19 வயதான தாரணி கடைக்குட்டி. தாராணி திருச்சியில் உள்ள சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் தாரணியின் தந்தை தான் தினமும் அவருக்கு தேவையான உணவு மற்றும் மாத்திரைகளை கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் தாரணியின் தந்தை செல்வரத்தினம் கடையில் இருந்து வர காலதாமதம் ஆகியதால் சுமார் 3 மணிக்கு தன் மகளுக்கு உணவு கொண்டு சென்றுள்ளார்.

தந்தை வரும் வரை பசி பொறுக்கமுடியாத தாரணி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக தாரணி வாழைப்பழம் சாப்பிடும் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு வாழைப்பழம் தொண்டையில் சிக்கியுள்ளது.

தொண்டையில் சிக்கிய வாழைப்பழத்தால் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார். இதைப்பார்த்த தாரணியின் தாயார் செல்வி, தொண்டையில் சிக்கிய வாழைப்பழத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். பின் மயங்கி விழுந்த தன் மகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளனர்.

ஆனால் அதற்கு முன்பே தாரணி உயிரிழந்ததாக தாரணியை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வால்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாரணியின் இழப்பை சமாளிக்க முடியாமல் அவரின் பெற்றோர் கடும் சோகத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்