பாஜகவின் அதிரடி 'மூவ்'.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இதுதான் காரணமா? உடைத்த அண்ணாமலை.. பரபரப்பு பேட்டி.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

BJP, Chennai, 2022, Jan 31:- பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் தேசிய கட்சியாக விளங்கி வருகிறது. இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்த கட்சியின் பிரதிநிதியாக இந்திய மக்களின் ஆண்டு கொண்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

பாஜகவின் அதிரடி 'மூவ்'

தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் தாமரை சின்னத்தை முன்னிலைப்படுத்தி பாஜக மிகவும் சிரமப்பட்டு தான் காலூன்றி நிற்க முடிந்தது. பாராளுமன்ற மற்றும் டெல்லி அல்லது வட இந்திய அளவில் பாஜகவின் கை ஓங்கி இருந்தாலும், தென்னிந்தியாவில் மெல்ல கால் பதித்தது.

Also Read: "வருங்கால சூப்பர் ஸ்டார்".. "ஒருத்தர் ஃபேமஸ்!".. இன்னொருத்தர் புதுமுகம்! பிரம்மாண்ட டிவி ஷோ மூலம் ஹீரோவை தேடும் இயக்குநர்!

அதன் பின்னரும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பெருவாரியாக களம் காணும் வாய்ப்பு அமையாமல் இருந்து வந்தது. அதன்பின்னர் தற்போதுவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக கட்சியுடன் தமிழகத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நல்ல உடன்படிக்கையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி 22-ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இதேபோல் உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதற்காக 60 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

அண்ணாமலை.. பரபரப்பு பேட்டி!

இப்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவை அறிவித்ததுடன், இது குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “அதிமுகவுடனான எங்களுடைய கூட்டணி அடுத்தடுத்து வரக்கூடிய எல்லா தேர்தல்களிலும் தொடரும். என்றாலும் இந்த நகர்ப்புற தேர்தலை பொறுத்தவரை கடைநிலையில் இருக்கும் தொண்டர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று தலைமை கருதுகிறது.

அதனால் முழுமையாக பாஜக தனித்து போட்டியிடும் இந்த முடிவை கஷ்டமாக இருந்தாலும் நாங்கள் துணிந்து எடுக்க வேண்டியிருக்கிறது. இதில் எங்களுக்கோ, அதிமுக தலைவர்களுக்கோ எந்த மனஸ்தாபமும் இல்லை. நாங்கள் எப்போதும் போலவே இருக்கிறோம். எங்களுடைய தொண்டர்கள் இணைந்தே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதான் காரணமா?

பாஜகவின் அதிரடி 'மூவ்' குறித்த காரணத்தை விளக்கிய அண்ணாமலை, “இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட நிற்க முடியவில்லை என்றால் வேறு வாய்ப்புகள் பாஜகவுக்கு வலுவாக அமைய காத்திருக்க வேண்டி இருக்கும். அதனால் இந்த முடிவை இப்போது எடுத்திருக்கிறோம். இதை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு பாஜக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லங்களிலும் தாமரையை மலரச் செய்யும் நோக்கத்தை முன்னெடுக்க உள்ளது. அதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.‌

அதிமுக கூட்டணி என்ன ஆச்சு?

அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை, “அதிமுகவும் பாஜகவும் பாராளுமன்ற தேர்தல் வரையிலான அடுத்தடுத்த தேர்தல்களில் எப்போதும் போல கூட்டணியில் இருக்கும். எங்களுக்கு பொதுவான எதிர்க்கட்சி என்றால் அது திமுக தான். அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற குற்றச்சாட்டு எங்களுக்கு உள்ளது. இது குறித்த பல விஷயங்களை அடுத்தடுத்த பிரச்சாரங்களில் முன்னெடுக்கவிருக்கிறோம்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

நகர்புற தேர்தல்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த சமயத்தில் தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்னும் எஞ்சியிருந்த பல ஊர்கள் புதிய மாவட்டங்களாக தோன்றியிருக்கின்றன. இது தமிழகத்தில் மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. 

இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழகத்தின் ஒவ்வொரு உள்புறங்களிலும், அடிப்படையில் இருந்தே பாஜகவை மலர வைக்கும் பாஜகவின் தற்போதைய அரசியல் வியூகமும், அதிரடியான நகர்வும் இப்போதைக்கு இருக்கும் தமிழக அரசியல் சூழலில் யாரும் எதிர்பார்க்காத பரபரப்பான திருப்பத்தை வகையில் உருவாக்கி இருக்கிறது!

Also Read: BB Ultimate வீட்டுக்குள் போன housemates! ஏன் 24 மணி நேரம்? கமல் விளக்கம்! 1 மணி நேர எபிசோடும் இருக்கு!

BJP, ANNAMALAI BJP, TN URBAN LOCAL BODY ELECTIONS, TNELECTIONS2022, LOCALBODYELECTIONS2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்