'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் அதிரடி நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கிய ஆரம்பத்தில், அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம், தமிழகத்தின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 49.8 சதவிகிதமாக அதிகரித்திருந்தது.
அதேநேரத்தில் ஊரடங்கு நாட்களில் விவசாயிகள் பாதிக்காத வகையில் அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் வருவாய் துறையிடம் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் என கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டது. இதனால் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடர்ந்து எந்த தங்கு தடையும் இன்றி நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தைச் சமாளிக்க 1,769 மருத்துவர்கள் உட்பட 10,661 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து வேலை வாய்ப்பின்மை விகிதம் மே மாதத்தில் 33 சதவிகிதமாகவும், ஜூன் மாதத்தில் 13.1 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. ஜூலை மாதம் வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் தமிழகத்தில் 8.1 % ஆக குறைந்துள்ளது. வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூட அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
அதன் ஒரு பகுதியாக 30,664 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 67,812 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் கூட, ஏப்ரல் மாதத்தில் 49.8 ஆக இருந்த வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிரடி நடவடிக்கைகளால் 8.1 விகிதமாக குறைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து தமிழகம் வருகிறது!.. 'இது' தான் ப்ளான்!.. தயார் நிலையில் மருத்துவர்கள்!
- 'இப்படியே போச்சுனா எத்தனை பேர் 'ரோட்டு'க்கு வருவாங்க தெரியுமா!? கொடிகட்டி பறந்தவங்களுக்கே இந்த நிலையா'?.. மோசமான நெருக்கடியில் நிறுவனங்கள்!.. 'பகீர்' தகவல்!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
- 'உலகிலேயே முதல்முதலாக இப்படி ஆகியிருக்கு'... ' 4 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த கொரோனா'... 'ஆய்வாளர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...
- ‘தடையை மீறி மது.. பார்ட்டி..நடனம்!’.. கொத்தாக பிடிக்க போன போலீஸ்.. 12 பெண்கள் உட்பட அடுத்தடுத்து உயிரிழந்த 13 பேர் !
- 'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா?'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு!'...
- 'தடுப்பூசி விஷயத்தில்'... 'துணிச்சலாக புது ரூட்டை கையிலெடுத்த சீனா'... 'பாதிப்பு குறைய இதுதான் காரணமா?'... 'சந்தேகத்தை கிளப்பும் நாடுகள்'...
- 'தமிழக முதல்வர் தொடங்கி வைத்த...' 'ஏராளமான மக்கள் நலத்திட்ட உதவிகள்...' - நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு...!
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'கூடிய சீக்கிரம் களத்துல... தெறிக்க விட்றோம்'!.. அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா!.. வெளியான பரபரப்பு தகவல்!