‘மீட்புப் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி’.. ‘குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனை’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வரிடம் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி.
மணப்பாறை அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் கடினமான பாறையை உடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் சுர்ஜித்தை மீட்கும்பணியை கைவிடமாட்டோம் என வருவாய் நிர்வாக ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்துள்ள பிரதமர் மோடி சுர்ஜித்துக்காக பிரார்த்திப்பதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “வீரமிக்க சிறுவன் சுர்ஜித் வில்சனுடன் எனது பிரார்த்தனைகள் இணைந்துள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கிளம்பிய ரயிலில்’... ‘அவசரத்தில் ஏறமுயன்று’... ‘தவறி விழப் போன பயணி’... 'நொடியில் காப்பாற்றிய போலீஸ்'!
- மொத்த ஆழம் 600 அடி.. 100 அடிக்கும் கீழே சென்ற குழந்தை.. தொடரும் மீட்புப்பணி.. 'குழிக்குள்' இறங்கும் வீரர்கள்!
- ‘அழுகாத சாமி, அம்மா எப்படினாலும் உனைய மேல் எடுத்துறேன்’.. ‘தாயின் பாசப்போராட்டம்’ மனதை உருக்கிய புகைப்படம்..!
- ‘அம்மா இருக்கேன் பயப்படாதே’.. 16 மணிநேரத்துக்கும் மேல் தொடரும் மீட்பு போராட்டம்' #SaveSujith பிரார்த்திக்கும் தமிழகம்..!
- திருச்சி: '2 நாட்களாக நீடிக்கும் இழுபறி'.. 70 அடி ஆழத்தில் குழந்தையின் போராட்டம்!
- ‘அடுத்த 2 நாட்கள்’... ‘குறையும் மழை’... டெல்டா மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
- ‘தீபாவளியன்று பட்டாசு வெடிக்க’.. ‘இந்த நேரம் மட்டுமே அனுமதி’.. ‘தமிழக அரசு அறிவிப்பு’..
- 10 பேருக்கு 'வீடு' கட்டி கொடுத்த நடிகர் 'ரஜினி காந்த்'... விவரம் உள்ளே!
- 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை... அதி தீவிர 'கனமழை பெய்ய வாய்ப்பு'... சென்னை வானிலை மையம் தகவல்!
- ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 52 கிலோ’.. ‘பசுவின் வயிற்றில் ஆப்ரேஷன்’.. சென்னையில் பரபரப்பு..!