தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்யணும்.. வியாபாரிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாகவே பரவலாக அனைவரது காதிலும் ஒலிக்கக்கூடிய ஒரு சொல் கொரோனா வைரஸ். உலக மக்கள் அனைவரையும் நடுநடுங்க செய்த கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. பல்வேறு வகையாக அவை உருமாறிக்கொண்டே வருகிறது. இதனை தடுக்க உலக நாடுகள் பலவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தாலும் கொரோனாவின் தாக்கம் தணியவில்லை. மேலும் அரசு வகுத்த கட்டுப்பாடுகளும் முக்கியமானது ஊரடங்கு.
ஒமிக்ரான் பரவல்:
இந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் தமிழகத்திற்குள் ஊடுருவியதால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தளங்களுக்கு செல்லவும், நிகழ்ச்சிகளில் அதிகமானோர் கூடவும், தியேட்டர்களில் 50% மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை நீக்ககோரி அறிக்கை:
இந்த நிலையில், வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊரடங்கை நீக்ககோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அன்றாடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பட்டியலிட முடியாத துன்பங்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு அடித்தட்டு வணிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுப்பாடுகளை தளர்த்திய உலக நாடுகள்:
தற்போது அதிகரித்து வரும் இந்த கொரோனா பரவலுக்கு அரசு நெறிமுறைப்படுத்த வேண்டியது விழிப்புணர்வு, மக்களின் சுயக்கட்டுப்பாடு மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே தான். வெளிநாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. அதோடு தடுப்பூசி போட்டுக் கொள்வது, முகக்கவசம் அணிதல், இரவு நேரஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை எல்லாம் மறு பரிசீலனைக்கு உட்பட்டவையாகும்.
சுய கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்:
மேலும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தடுப்பூசி கட்டாயமல்ல என அறிவித்துள்ளது. இதன் காரணமாக இக்கருத்துகளை கவனத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய பரிசீலனை செய்து, இதர மாநிலங்களுக்கு முன்னோடியாக சுய கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு பொருளாதார முடக்கத்தை மேலும் ஏற்படுத்தும். எனவே, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்றவற்றை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசு அறிவித்த அபராத உயர்வுத் தொகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் இரவு நேர ‘ஊரடங்கு’ அமலுக்கு வருகிறதா..? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!
- தமிழகத்தில் மீண்டும் 'ஊரடங்கு' அமல்படுத்தப்படுமா...? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்...!
- ஜெட் வேகத்துல 'டெல்டா பிளஸ்' பரவிட்டு இருக்கு...! 'இந்த நேரத்துல ஊரடங்கை தளர்த்துறது பெரிய ஆபத்துல போய் முடியும்...' அதிரடி 'முடிவு' எடுத்த நாடு...!
- இப்படி பண்றது 'அவங்களுக்கு' தான் பயங்கர ரிஸ்க்...! 'பெரிய ஆபத்துல போய் முடியும்...' - 'கடும் எச்சரிக்கை' விடுத்த உலக சுகாதார நிறுவன இயக்குனர்...!
- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? 'வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்...' - மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் சந்திப்பு...!
- இனிமேல் கடையெல்லாம் காலை 10 மணிக்கே க்ளோஸ்...! 'தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்...' - நாளை (15-05-2021) முதல் அமலுக்கு வருகிறது...!
- என்னங்க இதெல்லாம்...? 'ஊரடங்கு' அதுவுமா 'வெளிய' சுத்திட்டு இருக்கீங்க...? டக்குன்னு 'சாக்லெட் கவரை' எடுத்து போலீசாரிடம் 'சொன்ன' காரணம்...!
- எலெக்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் தமிழகத்தில் முழு ஊரடங்கா...? - விளக்கம் அளித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்...!
- சென்னையில் மீண்டும் ஊரடங்கா...? - விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர்...!
- தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்...!