'எங்க மகன் கஷ்டப்பட்டு படிச்சு, நல்ல வேலைல சேர்ந்தானே...' 'கடைசியில இப்படியா பாப்போம்...' - கதறி துடித்த பெற்றோர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நைஜீரியாவில் கப்பல் மாலுமியாக பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த 21 வயது இளைஞரின் உடல் இன்று தமிழகம் வந்து சேர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதான வில்பன் லோபோ. இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் மும்பையை சேர்ந்த நிறுவனம் மூலம் எம்.வி. ஹல்விட்டா என்ற கப்பலில் 9 மாத கால ஒப்பந்தம் அடிப்படையில் கப்பல் மாலுமியாக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை மாதம் 26-ஆம் தேதி அவர் பணிபுரிந்த வில்பன் லோபோ நைஜீரியா நாட்டு கடல் பகுதியில் நின்றபோது இரவு 10.30 மணியளவில் வில்பன் லோபோ திடீரென தவறி விழுந்துவிட்டார்.

கடும் போராட்டத்திற்கு பிறகு அடுத்த நாள் வில்பன் லோபோவின் உடல் கடலில் கண்டெடுக்கப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையடுத்து அவரது உடல் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

தன் மகன் இறந்த செய்தி கேட்ட வில்பன் லோபோவின் தந்தை வில்ஜியூஸ் லோபோ தன் மகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலுமி வில்பன் லோபோவின் உடல் நைஜீரியாவில் இருந்து விமானம் மும்பை வந்து சேர்ந்தது. அதையடுத்து மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தது. சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வில்பன் லோபோவின் உடல் சொந்த ஊரான புன்னக்காயலை இன்று காலை சென்று சேர்ந்துள்ளது.

தன் மகன் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று இப்படி சடலமாக வந்ததை காண முடியாத பெற்றோர்கள் வில்பன் லோபோவின் உடலை கட்டிப்பிடித்து அழும் காட்சிகள் காண்போரை கதிகலங்க வைக்கிறது. வில்பன் லோபோவின் குடும்பத்தார் மட்டுமல்லாமல் அவரின் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் அவரின் உறவினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள், கப்பல் மாலுமிகள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்