எழுதுனது 3 லட்சம் பேர், ஆனா பாஸ் பண்ணது..? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் தேர்வு ரிசல்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆசிரியர் தகுதி தேர்வில் ஒரே ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளிலும், 8 -ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
அந்த வகையில் ஆசிரியர் தேர்வின் முதல் தாள் ஜீன் மாதம் 8 -ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது இதில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியிருந்தனர்.
இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தது. இதில் 300 -க்கும் அதிகமானோர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். மொத்தமாக தேர்வு எழுதியவர்களில் 1 சதவீகத்தினரே தேர்ச்சி அடைந்துள்ளனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை..! உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்..!
- ‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..’ ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'டிக்டாக் வீடியோவுல கள்ளக்காதலனோட கொஞ்சினா.. 'அதான் ஆத்திரத்தில் இப்படி செஞ்சேன்'!
- இந்திய அணியின் ‘பிரபல முன்னாள் வீரர் திடீர் மரணம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
- 'நான் இருக்கேன்மா மகனா..'.. கைவிட்ட கணவன்.. மகனை இழந்த தாய்.. ஆனாலும் சோமாலியாவில் இருந்து வந்த குரல்.. நெகிழ்ச்சி சம்பவம்!
- 'அக்காவோட திருமணம் நடக்காதுன்னு நான் அத சொல்லல'.. 'ஆனா ரெட்ட வேஷம் போட முடியல'.. திருநங்கையின் கனவு!
- ‘இனிமேல் மாணவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!
- 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள்'... 'தமிழக அரசு அதிரடி'!
- ‘தமிழகத்தில் முக்கிய இடங்களில்’... ‘பாதுகாப்பு அதிகரிப்பு’... காரணம் இதுதான்!
- ‘பொன்.மாணிக்கவேலின் அடுத்த அதிரடி..’ சிலைக்கடத்தலில் முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு..