'அண்ணா பல்கலைக்கழகம்' முதல் 'பத்தாம் வகுப்பு' வரை!... தேர்வுகள் எப்போது?... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் தாக்கம் மாணவர்களின் கல்வியில், பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்தான முடிவை முதல்வர் தான் எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஊரடங்கு முடிந்த பின்னர் புதிய தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்