"பார்த்துக்குறது சுமை.. பாச மகனுக்கு பாரமா இருக்க கூடாது.!" - முதிர்ந்த தம்பதி எடுத்த இதயம் நொறுங்கும் முடிவு.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நோய் வாய்ப்பட்ட முதியோர் தம்பதியர் பெற்ற பிள்ளைக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று எண்ணி எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertising
>
Advertising

சென்னையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் ராஜா ஐயர் தெருவில் வசித்து வந்தவர் 72 வயதான ஆனந்தன். இவருடைய மனைவி 62 வயதான கங்கா தேவி. இருவரும் மதுரை சேர்ந்தவர்கள். இந்த தம்பதியருக்கு 32 வயதில் ஜெயக்குமார் என்கிற மகன் இருக்கிறார். ஜெயக்குமாருக்கு திருமணம் ஆகி அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில் தான் இந்த தம்பதியினர் இப்படி ஒரு சோகம் முடிவு எடுத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

ஜெயக்குமாரின் தந்தை ஆனந்தனுக்கு கண்ணில் குளுக்கோமா என்கிற நோய் குறைபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தாய் கங்கா தேவிக்கும் முடக்குவாதம் ஏற்பட, அவரும் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். ஆனாலும் தாய் தந்தையரை ஜெயக்குமாரும் அவருடைய குடும்பமும் கண்ணும் கருத்துமாக பார்த்து வந்திருக்கின்றனர். எனினும் நோய்வாய்ப்பட்ட இந்த நிலையில் தனது மகனும் மகனது குடும்பமும் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த வயது முதிர்ந்த தம்பதியர் ஒரு யோசனைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, தாங்கள் தங்கள் மகனுக்கு பாரமாக இருப்பதாக எண்ணி இருக்கின்றனர். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்தன் - கங்கா தேவி இருவரும் விபரீத முடிவு எடுத்திருக்கின்றனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்த ஜெயக்குமார், அதிர்ச்சி அடைந்து கதறிஅழுதிருக்கிறார். இந்தத் தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார், பிரேதங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உயிரை மாய்த்துக்கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலைமதிப்பற்றது. எதிர்மறை எண்ணம் மேலெழும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறை, தற்கொலை தடுப்பு தொடர்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

FAMILY, PARENTS, HEARTWARMING, SAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்