'மஞ்சள் இல்ல.. சந்தனம் இல்ல'.. 75 கிலோ அரைத்த மிளகாய்...பூசாரிக்கு நடந்த விநோத அபிஷேகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரி மாவட்டத்தை அடுத்த நலலம்பள்ளியில் கருப்பு சாமி அய்யனார் கோவில் விழாவில் அருள்வாக்கு சொன்ன பூசாரிக்கு நடந்த விநோதமான அபிஷேகம் கிடுகிடுக்க வைத்துள்ளது.
சாதாரணமாக ஒரு மிளகாயைக் கடித்தாலோ பலரால் தாங்கிக் கொள்ள முடியாது. அடுத்த 10 நிமிடத்துக்கு சிறு சிறு மிடறாக தண்ணீர் குடித்தபடி இருப்பார்கள். ஆனால் இந்த ஊர் பூசாரிக்கு 75 கிலோ மிளகாயை அரைத்து இவரின் மீது, பால் ஊற்றுவது போல் ஊற்றி, அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவில், காலை 5 மணி முதலே மக்கள் கூடி, பின்னர் கருப்புசாமி அய்யனாருக்கு பூஜைகளை செய்து, அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்தனர். நிகழ்வின் ஒரு அங்கமாக கருப்புசாமிக்கு பூஜைகள் செய்த பூசாரிக்கு பரவச நிலை உண்டாகி, அருள் வாக்கு கூறுவாரென்று கூறப்படுகிறது.
அதன் பின், ஏற்கனவே அரைத்து வைத்திருந்த 75 கிலோ மிளகாய் கூழ்மத்தை அப்படியே பூசாரியின் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளதாக புகைப்படங்களும், தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் திருவிழா நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எழுந்து நின்றார் அத்தி வரதர்’.. ‘அலைமோதும் மக்கள் கூட்டம்’.. பொது தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு..!
- இதுவரை 25 லட்சம் ‘பக்தர்கள்’... அலை அலையாய் ‘படை’யெடுக்கும் மக்கள் வெள்ளம்... யார் இந்த ‘அத்திவரதர்’!
- ‘பூஜைக்கு ஸ்பெஷல் ஹெஸ்ட்டாக வந்த முதலைக்கு குங்குமம் வைத்து ஆரத்தி’.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஊர்மக்கள்!
- 'தமிழ்நாட்டில் இப்படி ஒரு மகனா?'.. நெகிழ வைக்கும் செயலால் பெற்றோரின் இதயத்தை வென்ற நபர்!
- ‘சாமி கும்பிடும் போதா இப்டி நடக்கணும்’.. ‘நொடிப்பொழுதில் தீயில் சிக்கிய பெண்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!
- ‘அடிக்காதீங்க கோயிலுக்குள்ள போகமாட்டேன்’.. தாழ்த்தப்பட்ட சிறுவனை கட்டிவைத்து அடித்த கும்பல்! நெஞ்சை பதைக்கும் வீடியோ!
- திருப்பதில சாமி கும்பிட வந்த கிரிக்கெட் பிரபலங்கள்! செல்ஃபி எடுக்க சூழ்ந்த மக்கள்!