‘எல்லாரும் நமக்கென்னனு போனா யாருதான் சரிபண்றது’!.. தனி ஆளாக களத்தில் இறங்கிய காவலர்.. குவியும் பாராட்டு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை காவலர் ஒருவர் சரி செய்த சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் கூட்டு குடி நீர் திட்ட பணிக்காக சாலை அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் வேலை முடிந்ததும் பள்ளத்தை சரியாக மூடாமல் விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இன்று காலை சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற மக்கள் அனைவரும் நமக்கு என்னவென்று கடந்து சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் பள்ளம் இருப்பதை அறியாததால் அதில் தடுமாறி விழுந்துள்ளனர்.

இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர காவலர் அசோக் கவனித்துள்ளார். உடனே சாலையோரம் கிடந்த கற்களை கொண்டு தனி ஒரு ஆளாக சரி செய்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவருடன் சேர்த்து அப்பள்ளத்தை மூடினர். இதை சிலர் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். காவலரின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்