“தண்ணீர் பந்தலில் இருந்து டம்ளரை எடுத்துச் செல்லும் ரோந்து போலீஸார்”.. பரவும் சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரவு நேரத்தில் தண்ணீர் பந்தலில் இருந்து போலீஸார், டம்ளரை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியதை அடுத்து இணையதளத்தில் இளைஞர்களால் பகிரப்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தலும், இலவச மோர் பந்தலும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பலவற்றை கட்சி சார்ந்தவர்களும், பலவற்றை பொது சமூக ஆர்வலர்களும் வைத்துள்ளனர். இதனால் கோடைகாலத்தில் ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து சென்றுவரும் பலரும் பயனடைகின்றனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே, மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் தண்ணீர் பந்தல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மண்பானையும், அதன் மீது பிளாஸ்டிக் டம்ளரும் வைக்கப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் அங்கு ரோந்து பணிகாக வந்த இரண்டு போலீஸார், வண்டியை நிறுத்துகின்றனர்.
அதில் ஒரு காவலர் மட்டும் இறங்கிச் சென்று தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளரை எடுத்துக்கொண்டு, பானையை ஓப்பன் செய்து பார்த்துவிட்டு, டம்ளரை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து வண்டியில் ஏறுகிறார். பின்னர் இருவரும் கிளம்புகின்றனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி, இளைஞர்களால் பகிரப்பட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபரால் சென்னையில் நடந்த கோர விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- ஃபானி புயல் வந்துபோனதுக்கு ‘நானே சாட்சி’.. பிறந்த குழந்தைக்கு வைரல் பெயர்!
- ‘கைவரிசையை.. இல்ல.. இல்ல.. வாய்வரிசையைக் காட்டிய வளர்ப்பு நாய்’.. அப்படி என்ன செஞ்சுது? தரமான சம்பவம்!
- ’திருமண விடுப்பு' தராத மேலதிகாரி.. 13 முறை துப்பாக்கியால் சுட்ட காவலர்.. தேர்தல் பணியின்போது சோகம்!
- ‘முதல் புருஷனுடன் பிறந்த குழந்தைகளை பார்க்கப் போனாள்’.. 2-வது கணவர் கொடுத்த தண்டனை!
- ‘அப்போ சிறுமிகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கும் ஆடைதான் காரணமா?’.. பெண்மணியின் செயலுக்கு இளம் பெண்கள் பதிலடி.. பரபரப்பு வீடியோ!
- கோவில் திருவிழாவில் விநோதம்.. துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி!
- 'எவ்வளவு ட்ரிக்ஸ்டா உளவுத்துறைக்கு வேல பாக்குதுயா இந்த திமிங்கலம்’.. உஷாரான கடற்படை!
- 'பிரபல நிதி நிறுவனத்தில் 813 சவரன் நகை, பணம் கொள்ளையடித்தவர்கள் வேற யாரும் அல்ல’.. அதிரும் திருப்பம்!
- '6 ஆயிரம் கடனுக்காக 6 வருடமாக கொத்தடிமைத்தனம்.. 7 குடும்பங்கள் மீட்பு'.. பதறவைக்கும் சம்பவம்!