‘பிளஸ்-2 ரிசல்ட் தேதி அறிவிப்பு’!.. மாணவர்களின் ‘மதிப்பெண்’ எப்படி கணக்கிடப்படும்..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி, நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவர்களுக்கு, 10-ம் வகுப்பு பொதுதேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.



இதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 22-ம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்