‘தெளிவுடா தம்பி!’.. ‘இந்த சின்ன வயசுல இவ்வளவு முதிர்ச்சியா?’.. ‘பதில் ஒவ்வொன்னும் வேற லெவல்!’.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிராமத்து சிறுவன் ஒருவன் தான் எதிர்கொண்ட சில கேள்விகளுக்கு சொல்லும் பதில்கள் சுவாரஸ்யமான வீடியோவாக வைரலாகி வருகிறது.

‘எங்க கிராமத்துல எந்த பிரச்சனையும் இல்ல... இந்த உலகம் இயற்கையா இருக்கணும்.. எல்லாம் மத்தவங்க மேல அன்பு செலுத்தணும்.. கிராமத்துல இருந்து படிச்சு முடிச்சுட்டு சிட்டிக்கு போக மாட்டேன்.. சிட்டியில தண்ணி பிரச்சனை, புகை, இரவு தூங்க முடியாது, கிராமத்துல மயில் சத்தம், குயில் சத்தம்,இரவு நேரத்துல கொல்லைப்புறத்துல படுத்துறங்கலாம். அமைதியா இருக்கும்... கிராமத்தில் இருந்து படிச்சு முடிச்சுட்டு சிட்டியில் பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் முட்டாள்கள் என்றுதான் சொல்லணும்’ இத்தனை பதில்களும் சரவெடி போல், புல்லட்டில் இருந்து புறப்பட்ட தோட்டாக்களைப் போல் படபடவென ஒரு சிறுவன் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்னதுதான்.

படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டதாகக் கூறப்படும் இந்த சிறுவனின் பதில்தான் தமிழ்நாட்டையே கலக்கும் வகையில் இணையதளத்தில் வீடியோவாக வலம் வருகிறது. மேலும் இந்த வீடியோ பதிவில் விவசாயம் பற்றி கேட்கும் கேள்விக்கு,  ‘விவசாயம் பண்றதுதான் மக்கள் வாழ முடியும். விவசாயி மேல.. பணக்காரங்க மேல.. ஒரு பெரிய பனங்காயை நகரத்தில் 200 ரூபாய்க்கு விக்குறாங்க.. கிராமத்தில் நீங்களே வெட்டி சாப்பிட்டுக்கலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க’ என்றும் ‘கிராமத்துல வாழ்றவங்க கிராமத்துலயே வாழலாம். ஆல, வேலம் பல் குச்சிகளை பயன்படுத்தலாம். நகரத்தில் அதற்கு 10 ரூபாய் செலவு செய்ய வேண்டும். காசு இருந்தால் மட்டும்தான் வாழ்க்கைனு நெனைக்கிறாங்க. காசே இல்லனாலும் நமக்கான வாழ்க்கையை நாம் இயற்கையின் உதவியுடன் வாழ முடியும்’ என்று பளிச்சென்று பேசுகிறான்.

இந்த சிறு வயதில் இத்தனை தெளிவுடனும்,

முதிர்ச்சியுடனும் பேசும் இந்த சிறுவனுக்கு சரியான கல்வி கொடுத்தால், தரமாக வருவான் என்று பலரும் நெகிழந்து பாராட்டி வருகின்றனர்.

 

VIDEOVIRAL, MINORBOY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்