‘எதெல்லாம்’ கொரோனா ‘அறிகுறி?’... ‘வெயிலால்’ வைரஸ் கட்டுப்படுமா?... தமிழகத்தில் ‘144’ உத்தரவுக்கு வாய்ப்புண்டா?... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ பதில்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த கேள்விகளுக்கு பிகைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியில்  சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் அறிகுறி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இந்த மூன்றும் தான் கொரோனாவிற்கான அறிகுறிகள். வெளி நாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ பயணம் செய்துள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், பரிசோதித்துப் பார்க்கும் நிலைக்கு செல்ல வேண்டும். இந்த அறிகுறிகளுடன் ஒருவர் பயணம் செய்திருந்தாலோ அல்லது பாதிப்பு உள்ளவருடன் இருந்திருந்தாலோ தான் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, மருத்துவமனைக்கு வருபவருக்கு நிமோனியா போன்ற சுவாச பிரச்சனைகள் இருந்தாலே அவருக்கு பரிசோதனை செய்யும்படி கூறப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்

வெப்பநிலையால் வைரஸ் தாக்கம் குறையுமா எனக் கேட்கப்பட்டபோது பேசிய அவர், “40 டிகிரி வெப்பநிலை பதிவாகும் துபாயில் ஒரே நாளில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளபோது, அதைவிட வெப்பநிலை குறைவாக உள்ள சென்னையில் வெப்பநிலையால் கொரோனா கட்டுப்படும் என்பது உண்மையல்ல. அத்துடன் வதந்திகளை நம்பாமல் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கூறுவதை மட்டும் கேட்டு செயல்பட்டாலே போதும்” எனத் தெரிவித்துள்ளார். பின்னர் 144 உத்தரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  “ஒரே நேரத்தில் நாம் அனைத்தையும் தடை செய்துவிட்டால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் சூழலைப் பொறுத்தே அடுத்தடுத்த நிலைகளுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

CORONAVIRUS, TN, MINISTER, VIJAYABASKAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்