திரைப்பட பாணியில் கடத்தப்பட்ட அமைச்சர் உதவியாளர்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பட்டப்பகலில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணணின் உதவியாளர் கத்தி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணணின் உதவியாளர் கர்ணன் இன்று காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அன்சாரி வீதியிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
சட்டமன்ற அலுவலகத்துக்குள் இருந்த கர்ணனை அந்த கும்பல் அடித்து வலுக்கட்டாயமாக கத்தி முனையில் காரில் கடத்தி சென்றுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் சட்டமன்ற அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் மாவட்ட எஸ்.பி திஷா மிட்டல், டிஎஸ்பி ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டனர். உடனே திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே சில கிலோமீட்டர் தொலைவில் கர்ணனை அந்த கும்பல் காரிலிருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. திரும்பி வந்த கர்ணணிடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் அமைச்சரின் உதவியாளர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “நடிப்புல சக்ரவர்த்தி... ஆனா ‘இந்த விஷயத்துல’ அவர் இன்னும் LKG கூட சேரல!”.. அமைச்சர் செல்லூர் ராஜூ!
- “விமர்சனங்கள்தான் ஊக்கம் கொடுத்துச்சு!” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்!
- VIDEO : அட, இந்த 'ஐடியா' கூட நல்ல இருக்கே... 'கொரோனா' கிட்ட இருந்து பத்திரமா இருக்க... அசத்தல் 'பிளான்' போட்ட தமிழக 'அமைச்சர்'!!
- ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ திட்டமிட்ட மடகாஸ்கர் ‘மந்திரி’.. மிரள வைத்த ‘காரணம்’!
- 'அமெரிக்க எழுத்தாளரை' பலாத்காரம் செய்த 'பாக். அமைச்சர்...' 'ஃபேஸ்புக் நேரலையில்' பகிரங்க 'குற்றச்சாட்டு...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'நேரலை வீடியோ...'
- 'கொரோனா' வைரஸ் உங்கள் 'மனைவி போன்றது...' 'ஆரம்பத்திலேயே' 'கட்டுப்படுத்தி விட' வேண்டும்... 'உதாரணம்' கூறி 'சர்ச்சையில்' சிக்கிய 'மந்திரி...'
- 'தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா'... 'சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு'... 'சுகாதாரத்துறை தகவல்'!
- ‘எனக்கு கொரோனா தொற்று இல்லை’.. ‘டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க’.. ஆதாரத்துடன் வெளியிட்ட அமைச்சர்..!
- '30-ந் தேதி' வரை 'மதுக்கடைகள்' திறக்கப்படாது 'பொதுமக்கள்' நலனே எங்களுக்கு 'முக்கியம்'... 'அமைச்சர் தங்கமணி தகவல்...'
- ‘மைக்குக்கு ஸ்ப்ரே!’.. ‘ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?’.. ‘தமிழகத்துக்கு நிதி குறைவா?’.. அமைச்சரின் அதிரடி பதில்கள்!.. வீடியோ!