'கொரோனா கிட்ட இருந்து கூட தப்பிச்சுரலாம்' ... 'ஆனா அவங்க கொரோனாவ விட டேஞ்சர்' ... தமிழக அமைச்சரின் கிண்டல் பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக கொரோனா வைரஸ் போன்றது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், 'தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாத வண்ணம் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரசிலிருந்து கூட நாம் தப்பித்து விடலாம். ஆனால் எதிர்க்கட்சி என்ற கொரோனா வைரசில் இருந்து நாம் தப்பிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. பொய் பேசுவதில் திமுக கின்னஸ் சாதனை படைத்தவர்கள்' என திமுகவை விமர்சனம் செய்தார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் பேசுகையில், 'கூகுளில் சென்று எளிய முதலமைச்சர் யார் என்று தேடினால் நமது முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களின் பெயர் தான் வரும் என்பதை மக்கள் மறந்து விடக் கூடாது' என தெரிவித்தார்.

RB UDHAYA KUMAR, TN MINISTER, DMK, CORONA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்