மின் நுகர்வோர்கள் ஆதாரை இணைக்க சொல்லி வந்த மெசேஜ்.. 100 யூனிட் மானியம் ரத்தாகுமா.? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளதை அடுத்து, மின் நுகர்வோர்கள் பலருக்கும் வந்த மெசேஜ் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் நுகர்வோர் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கென மின்வாரிய இணையதள பக்கத்தில் லிங்க் ஒன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வடகிழக்கு பருவமழை எவ்விதத்திலும் மின் விநியோகத்தை பாதிக்காத அளவுக்கு, எந்தவித தடையும் இல்லாத சீரான மின்சாரம் வழங்குவதற்கு வழிசெய்யும் வகையில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகளை உயர் அதிகாரிகளுடனுனான ஆய்வு கூட்டத்தில் ஆலோசித்துள்லதாகவும், தற்சமயம் மழையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தாமதிக்காமல் மின்னகத்தை உடனே தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து தெரியப்படுத்தவும்,  புகார் தெரிவிக்கவும் தயங்க வேண்டாம் என்றும், அந்த புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சீர்காழியில் 46 மின் மாற்றிகள் புதிதாக் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சீர்காழியில் மழையினால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 36 மணி நேரத்தில் மின்விநியோகம் சீராக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதிப்புகள் உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக பேசியவர், குறிப்பிட்ட அறிவிப்பு தொடர்பாக அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும்,  மின் இணைப்புடன் மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் அந்த ஆதார் எண்ணை இணைக்கும்போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரவே செய்யும், எனவே ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானிய மின்சாரம் என்பது ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவினால் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கோண்டார்.

AADHAAR, TNEB, ELECTRICITY, RAIN, SENTHIL BALAJI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்