‘மைக்குக்கு ஸ்ப்ரே!’.. ‘ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?’.. ‘தமிழகத்துக்கு நிதி குறைவா?’.. அமைச்சரின் அதிரடி பதில்கள்!.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அமைச்சர் ஜெயகுமார் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.  முன்னதாக “தம்பி.. வழக்கமான சம்பிரதாயம் இது” என்று சொல்லி அமைச்சர் மைக்குக்கு ஸ்ப்ரே அடித்தார்.

அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும், தனிமனித இடைவெளி மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதில் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் கும்பலாக சேர்ந்து கொரோனா வைரஸை கொரியர் போல எல்லாரிடத்திலும் கொண்டு போய் சேர்க்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

Tracing, Testing மற்றும் Treatment உள்ளிட்ட 3 படிநிலைகளில் மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிவதாகவும், சீனாவில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட நோய்தான் கொரோனா என்றும் 300 நாடுகளில் 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் 2வது கட்டத்துக்கு சென்றுவிட்டதாகவும், இதற்கென தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருவதாகவும், அனைத்து விதமான கண்காணிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூகப்பரவலை தடுப்பதற்கு பல நாடுகள் முன்னேற்பாடுகளை செய்யாததால்தான் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டன. ஆனால் தமிழகத்தில் இந்த புள்ளிவிவரங்களைக் கொண்டு 10 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து அப்பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்படாதவாறு தடுப்பதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வருமுன் காப்போன் என்கிற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தவிர, முதற்கட்டமாக தமிழகம் மத்திய அரசிடம் 510 கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் ஆனால் தமிழகம் 12 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ள அமைச்சர், இயற்கைப் பேரிடருக்கும், இந்தியா முழுவதும் உள்ள இந்த கொரோனா தொற்றுக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், மத்திய அரசு தமிழகத்தின் பிரச்சனையை சீரியஸாக உணர்ந்து கண்டிப்பாக நமக்கு தேவையானவற்றை ஆவன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்