"குழந்தை'ங்க மார்க் விஷயத்துல பெத்தவங்க இத மட்டும் பண்ணிடாதீங்க.." அறிவுறுத்தும் அமைச்சர் அன்பில் மகேஷ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பசுமை வழி சாலையில் நடந்த மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பேசினார்.

Advertising
>
Advertising

சுமார் 300 பேருக்கு தலா 3000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கி பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தற்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 38000 கோடி ரூபாயை மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒதுக்கி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

மார்க் விஷயத்துல இத மட்டும் பண்ணாதீங்க..

அது போக, ஒன்பது லட்சம் மாணவர்கள் தற்போது அரசு பள்ளியில் இணைந்து இருப்பதாக குறிப்பிட்ட அன்பில் மகேஷ், பெற்றோர்கள் மாணவர்களை மதிப்பின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்து தாழ்த்தியோ உயர்த்தியோ பேசக் கூடாது என்றும் எத்தனை மார்க் வாங்கினாலும் அவர்களை கொண்டாட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. அதை அடையாளம் கண்டு, அதை ஊக்குவித்து அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

TN SCHOOLS, TN PUBLIC EXAM, ANBIL MAHESH, MINISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்