‘இந்த மாஸ்க்க போடுங்க’.. ‘கொரோனா வைரஸ் கிட்டகூட வராது’.. அசத்திய மெக்கானிக்கல் இன்ஜினீயர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சத்தியமங்களைச் சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரி புதிய மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
சத்தியமங்கலம் அடுத்த திருநகர் காலனியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் விக்னேஷ். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கோவையில் உள்ள தனியார் கார்பன்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இதனால் கார்பன்ஸ் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக பல ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் வீட்டில் இருந்தபடியே செய்து வருகிறார்.
இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி வெளியானது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாஸ்க் அணுயும்படி சீன அரசு அறிவுறுத்தியது. இதனால் ஒரே நேரத்தில் அதிக மக்கள் மாஸ்க் வாங்க குவிந்ததால் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் அன்றாடம் பயன்படுத்தும் பென்சிலில் உள்ள கிராபெனின் என்னும் பொருளை வைத்து புதிய மாஸ்க் ஒன்றை விக்னேஷ் கண்டுபிடித்துள்ளார். பென்சிலில் உள்ள கிராபெனின் என்ற பொருளை நன்றாக பொடியாக்கி மாஸ்க் மீது தடவி அல்லது கண்ணாடி டேப் மூலமாக மாஸ்க் மீது வைத்தால், அதன் துகள்கள் மாஸ்க்கில் 0.142 என்.எம் அளவுக்கு மட்டுமே இருக்கும். இதனால் இந்த மாஸ்க்கை பயன்படுத்தினால் 95 சதவீதம் வைரஸ் தொற்று குறையும் என research gate என்ற இணையத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தவகை மாஸ்க் சீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்ட’.... ‘சொகுசு கப்பலில்’... ‘மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட’... ‘தமிழர்கள் 6 பேர் உள்ளதாக தகவல்’!
- ‘பேய்’ நகரத்தைப் போலவே இருந்தது... ‘துணிச்சலுடன்’ மீட்டு வந்த ‘ரியல்’ ஹீரோக்களின் ‘திகில்’ அனுபவம்...
- 'ரொம்ப பயமா இருக்கு'... 'எங்கள காப்பத்துங்க'... ‘தனிமைப்படுத்தப்பட்ட சொகுசுக் கப்பலில்’... ‘நடுக்கடலில் தவிக்கும் இந்தியர்கள்’!
- 'தயவு செஞ்சு என்ன கூட்டிட்டு போங்க'...'10 நாள்ல எனக்கு கல்யாணம்'...'கதறும் கல்யாண பொண்ணு'!
- ‘கொரானாவின் கொடூரம் கொறையல.. அதனால’.. ‘ஆப்பிள் நிறுவனம்’ எடுத்த அதிரடி முடிவு!
- ‘சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க’... ‘உதவிக்கரம் நீட்டப்படுமா?’... ‘இந்தியா கொடுத்த அதிரடி பதில்’!
- ‘கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு’... ‘மருத்து கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனம்’... ‘சீனாவில் நோயாளிகளிடம் பரிசோதிக்க திட்டம்’!
- 'அச்சுறுத்தும்' கொரோனா... 'நோயாளிகள்' தான் பர்ஸ்ட்... சொந்த திருமணத்தில் 'டாக்டர்' மாப்பிள்ளை செய்த தியாகம்!
- முதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...
- 'முதுமையில் தாக்கிய கொரோனா வைரஸ்’... ‘ஐசியூவில் பரிவுடன் கலந்த’... ‘கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்’... ‘இதயத்தை உருக்கும் வீடியோ’!