"5 மாத உழைப்பு.. 6 விதமான கருவிகள்!".. ஆழ்துளைக் கிணறு விபத்துகளில் உதவும் கண்டுபிடிப்பு! எப்படி இயங்கும்? முழு விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் ஒருவர் ஆழ்துளைக் கிணறு விபத்துக்குள்ளானால், மீட்கும் கருவியை வடிவமைத்துள்ளார். ஆட்டோ பழுது நீக்கம் செய்யும் டிங்கரிங் ஒர்க்‌ஷாப் நடத்திவரும் லெனின் என்கிற நாகேந்திரன்(40) 10-ம் வகுப்பு வரை படித்துள்ள நிலையிலும், கடந்த 5 மாதங்களாக தீவிர முயற்சியைக் கொண்டு, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும்  6 விதமான கருவிகளை வடிவமைத்துள்ளார்.

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்ததும் பக்கவாட்டில் ஒரு கருவியை செலுத்தி, குழந்தை இருக்கும் இடத்தை விட இன்னும் கீழே இறங்காமல் முதலில் தடுத்து, பின்னர் கைகள் போன்ற மீட்புக் கருவியை செலுத்தி குழந்தையின் தலை பாகத்தை இறுகப் பிடித்தவாறு குழந்தையை பாதுகாப்பாக மேலே தூக்க வேண்டும் என்று இக்கருவியை எப்படி பயன்படுத்துவது பற்றி நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சென்சார் உதவியுடன் ஒளிரும் எல்இடி பல்புடன் கூடிய கேமரா இந்த கருவியில் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே இருக்கும் குழந்தையின் பொசிஷன் உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டு குழ்ந்தையை காப்பாற்ற முடியும் என கூறிய நாகேந்திரன், குழந்தை நேராக, தலைகீழாக, கைகளை தலைக்கு மேல் தூக்கியவாறு என எப்படி விழுந்திருந்தாலும் குழந்தையை பாதிப்புகள் இல்லாமல், உயிருடன் மீட்பதற்காக இப்படி 6 விதமான கருவிகளை வடிவமைத்துள்ளதாகவும் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 10 அங்குலம் சுற்றளவு வரை விரிக்க முடியும் இந்த கருவையைக் கொண்டு சுமார் 7 கிலோ முதல் 10 கிலோ எடையுள்ள குழந்தையை மீட்க முடியும் இந்த கருவியை வடிவமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் செலவானதாகவும், மத்திய, மாநில அரசுகள் இந்த கருவியை அங்கீகரித்து, நிதியுதவி அளித்தால் தொழில்நுட்ப உதவியுடன் இதனை இன்னும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்