'ஊரடங்கு 5.O'.. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை நீட்டிப்பு? .. முழுவிவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசின் அறிவிப்பின் படி ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கும். மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை தொடரும், போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மண்டலங்களுக்கு இடையே பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை. அண்டை மாநிலங்களுக்கு செல்ல தடை தொடர்கிறது. பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். ஜூன் 8ம் தேதி முதல் தேநீர் கடைகள், உணவகங்கள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மால்கள், பெரிய தங்கும் வகையிலான ஓட்டல்களுக்கு தடை நீடிக்கிறது, ஜூன் 1 முதல் ஜூன் 7ம் தேதி வரை காய்கறி கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளன.

1. வழிப்பாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

2. நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.

3. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். இதில் மருத்துவத்துறை, காவல்துறை, அரசு அலுவலர்கள், வெளிமாநிலத்தவர், தனிமைப்படுத்தப்படும் பயணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

4. வணிக வளாகங்கள்.

5. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள். எனினும் இந்நிறுவனங்கள் இணைய வழி கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்.

6. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கபட்ட பயணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

7. மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

8. திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar) பெரிய அரங்குகள், கூட்ட அடங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

9. அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

10. மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

11. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

12. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்