பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் மிகப்பெரிய லாக்டவுன் தளர்வுகள்.. என்னென்ன? விவரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 1-ல் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1-2-2022 முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
3. மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
4. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.
5. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.
6. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
7. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
8. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
9. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
10. கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
11. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
12. அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
13. உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.
14. அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.
15. அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
16. அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks) நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள்:
1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
2. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஊரடங்கு நீக்கம்:
> 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் சந்திக்கும் பெரும் சவால்.. நிதின் கட்கரி வெளியிட்ட வீடியோ.. ஸ்டாலின் பரபரப்பு கடிதம்
- ஹனிமூன் பீரியட் முடிந்தது! அக்னி பரிட்சைக்கு தயாரான ஸ்டாலின்.. அதிகாரிகளின் மீது கடுப்பில் முதல்வர்
- பெரு முதலாளிகளின் இடத்தில் கை வைக்குமா அரசு? - ஏழைகளின் வீடு ஆக்கிரமிப்பா? - சீமான் கேள்வி
- எங்க நாட்டுல ‘ஒமைக்ரான்’ பரவுனதுக்கு காரணமே.. வெளிநாட்டுல இருந்து வந்த அந்த ‘பொருள்’ தான்.. புது குண்டை தூக்கிப்போட்ட சீனா..!
- உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து இரண்டு மடங்கு! 99% மக்கள் வருமானம் குறைந்தது.. காரணம் என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்
- என்ன குறையை கண்டீங்க..கடுப்பான உதயநிதி ஸ்டாலின்.. நிசப்தமான மீட்டிங்
- ஞாயிறு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
- உங்களுக்கு கொரோனா இருக்கா? 15 நாள்கள் இந்த 'பாக்ஸ்'க்கு உள்ளேயே இருக்கணும்.. சீனா கொண்டு வந்துள்ள அதிரடி சட்டம்!
- குட் நியூஸ்! போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு - முதல்வர் அதிரடி
- பொங்கல் தொகுப்பில் ஹிந்தி எழுத்துகளா? அமைச்சர் விளக்கம்