தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றிருந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு முடிவின் போது, மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று காலை சுமார் 8 மணி முதல், ஓட்டு எண்ணிக்கை தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதிலும், 279 மையங்களில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில், திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
தொடர்ந்து, பல இடங்களில் தேர்தல் முடிவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் நகராட்சி, 8 ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர் உமா, ஒரு வாக்கு வித்தயாசத்தில், திமுகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த 'சர்கார்' திரைப்படத்தில், ஒரே ஒரு வாக்கின் மூலம், முடிவு மாறியதை பற்றி சில வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், தற்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஒரு வாக்கு அதிகமாக பெற்று, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை மாநகராட்சியின் தேர்தல் முன்னணி நிலவரம்.. எந்தக் கட்சி முன்னிலை?
- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.. திமுக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை..!
- அமைச்சர் எல்.முருகன் ஓட்டை இன்னொருவர் கள்ள வாக்காக போட்டுள்ளார்.. அண்ணாமலை போட்ட ஷாக் ட்வீட் - தேர்தல் ஆணையம் கொடுத்த பதில்..!
- திமுகவுக்கு பிரச்சாரம் செய்த ருமேனியா நபர்.. நேரில் ஆஜராக மத்திய அரசு உத்தரவு.. சிக்கலில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்
- "பொண்ணுங்க மட்டும் ஏன் டிக்கெட் எடுக்கல".. "அட.. வேர்ல்டுல எங்கயும் இப்படி இல்ல".. ருமேனியர் எடுத்த பரபரப்பு முடிவு
- ரூ. 1000 உரிமை தொகை.. நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்.. திடீரென வேகம் எடுக்கும் திமுகவின் அரசியல் டிராக்?
- "உதயநிதியிடம் ஒரு ரகசியம் இருக்கு".. 1st time உதய் பற்றி இவ்ளோ பேசிருக்காரு EPS!
- என்கிட்டயே சவாலா- மெல்லிசாக ஊற்றி, அழகாக மடித்து.. மாஸ்டரிடம் தோசையை நீட்டிய அண்ணாமலை.. செம்ம கலகல!
- "இவ்ளோ பில்டப் தேவையில்லை.. வேணும்னா வெளில போங்க" - நயினாருக்கு பதில் கொடுத்த சபாநாயகர் அப்பாவு..!
- பார்லிமென்ட்டில் தமிழ்நாடு பற்றிய பேச்சுக்கு முதல்வர் நெகிழ்ச்சி .. பதிலுக்கு ராகுல் காந்தி போட்ட வைரல் ட்வீட்