வேலூர் மாநகராட்சி தேர்தல் - திருநங்கைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்.. மாற்றம் தொடங்கிவிட்டது

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

Advertising
>
Advertising

மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்றைய தினத்தில் (பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில், காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல வார்டுகளில் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட  திருநங்கை கங்கா, தற்போது வெற்றி பெற்றுள்ளார். வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில், திமுக வேட்பாளராக கங்கா களமிறங்கியிருந்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல், திமுக உறுப்பினராக இருந்து வரும் கங்கா, தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், வேலூர் மாநகராட்சியின் 37 ஆவது வார்டில், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2131 வாக்குகள் பெற்ற கங்கா, 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

TN LOCAL BODY ELECTIONS, TN ELECTIONS, THIRUNANGAI GANGA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்