இனி எவ்ளோ லேட்டானாலும் கவலையில்ல... ஒரே ‘க்ளிக்’ தான்... நிமிடங்களில் உதவிக்கு வந்து அசத்தும் ‘தமிழக காவல்துறை’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி மூலம் சென்னையில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களில் இருந்து அவர்கள் தங்களை காத்துக் கொள்ள உதவும் வகையில், தமிழக போலீசார் காவலன் SOS என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டும் விவரங்களைப் பதிவு செய்துகொண்டால் இந்த செயலி பயன்படுத்த தயாராகி விடும். இந்த செயலியை தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் பயன்படுத்த முடியும்.

பெண்கள் ஏதேனும் ஆபத்து நேரப்போவதாக உணர்ந்தால், இந்த செயலில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் அடுத்த சில நிமிடங்கள் போலீசார் அவர்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்து உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. SOS பட்டனை அழுத்தியதும் GPS இயங்க ஆரம்பித்து செல்ஃபோன் கேமரா தானாகவே 15 விநாடி ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோவை எடுத்து அதை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிடும். செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை ஆர்.கே நகர் பகுதியில் வசித்துவரும் ப்ரீத்தி என்பவருடைய வீட்டுக்குள் கொரியர் கம்பெனி ஊழியர்கள் எனக் கூறி 2 நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து அவர் உடனடியாக காவலன் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தி உதவி கேட்க, 5 நிமிடங்களில் அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த 2 நபர்களையும் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் பெயர்கள் சலீம் (41), தாவூத் (38) எனத் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கிடைத்த 5 நிமிடங்களில் போலீசார் விரைந்து வந்து உதவியதைத் தொடர்ந்து இந்த செயலிக்கு தற்போது வரவேற்பு பெருகி வருகிறது.

TAMILNADUPOLICE, WOMAN, SAFETY, APP, KAVALAN, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்