‘அந்த லிஸ்ட்ல தமிழ்நாடு இல்ல’!.. ‘யாரும் வீண் வதந்தியை பரப்பாதீங்க’.. சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை. யாரும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். ஆனாலும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்’ என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஒரே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வத்தைத் தவிர்த்து, கொரோனா பாதிப்பின் அளவை பொறுத்து அதற்கேற்றவாறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும், அரசியல் கட்சியினர் தேர்தலுக்காக கூட்டத்தை கூட்டும் போது, அங்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்