‘தமிழகம் முழுவதும் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள மாநிலமாக அறிவிப்பு!’ - மாநில சுகாதாரத்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதுமே கொரோனா தோற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதியாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தித்தாள்களிலும் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ளவர்களின் எண்ணிக்கை 234 என்கிற அளவில் அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை அதிக கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் உள்ள மாநிலங்களில் தமிழக 3வது இடத்தில் உள்ளது. மேலும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உள்ளவர்கள் அறிகுறிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்புள்ளவர்களின் குடும்பத்தினர் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாவட்டங்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் இதுவரை 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளது. இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரத் துறையின் மூலமாக செய்தித்தாள்களில் மக்களுக்கு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் முழுவதும் பாதிப்பு பரவ அதிக வாய்ப்புள்ளது என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற பாதிப்பு, தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தால் உடனே அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர வணிக நிறுவனங்கள், மக்கள் கூடும் இடங்களில் உயரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது சுகாதாரத் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

CORONA, CORONAVIRUS, CORONAPANDEMIC, CORONAFIGHTERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்