இன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு..? சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது தமிழக கடலோர பகுதிகளில் நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் சற்று கனமழை பெய்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை (திங்கள்கிழமை) கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, ராமாநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழையும், மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தீபாவளிக்கு தடையை மீறி’... ‘பொதுமக்கள் செய்த காரியம்’... ‘மோசமடைந்த நகரங்கள்’... ‘செய்வதறியாது தவிக்கும் மாநில அரசு’...!!!
- ‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்!’.. ‘வீடியோ!’
- ‘திடீரென ஆம்னி பேருந்துக்கு நேர்ந்த கதி’.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
- 'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை!
- ‘இவங்களுக்கு மட்டும்’... ‘டிசம்பர் 2-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்’... ‘தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு’...!!!
- Breaking: நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறதா...? - தமிழக அரசு புதிய உத்தரவு...!
- 'தீபாவளிக்கு அடை மழை பெய்யுமா’...??? ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன???’... விபரங்கள் உள்ளே...!!!
- “சாதி பெயரை ஏன் நீக்கணும்? மாட்டேன்.. அது என் அடையாளம்.. வரலாறு” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள தமிழக பெண் ‘பரபரப்பு’ பதில்!
- 'செல்போன ஆட்டைய போட வீட்டுக்குள்ள போயிட்டு...' 'பக்கா எவிடன்ஸ் விட்டுட்டு வந்த திருடன்...' - திடீர்னு வந்த போன்கால் தான் அல்டிமேட் ட்விஸ்ட்...!